சபாக் பெர்ணம் மே 3: வெள்ளப் பிரச்சனையை தீர்க்க பல பகுதிகளில் உடனடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டமிடப்படாத வளர்ச்சிப் பகுதிகளில் பிரமாண்டமான நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப் படுவதாக உள்கட்டமைப்பு EXCO கூறினார்.
"நீண்ட கால திட்டங்களைச் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, ஆனால் அதே நேரத்தில், மீண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறோம்".
"வெள்ளம் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால், நீண்ட கால திட்டம் நிறைவடையும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது" என்று டத்தோ ஐஆர் இஸ்ஹாம் ஹாஷிம் இன்று கூறினார்.
செக்கின்சானில் பிரையர் ரிசோர்சஸ் எஸ். டி. என் பெர்ஹாட் மற்றும் பெஹன் மேயர் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய மேம்பட்ட மற்றும் நிலையான விவசாய தொழில் நுட்பத்தை (B.A.S.E) பயன்படுத்தி பிரீமியம் உர வெளியீட்டு நிகழ்வில் அவர் இதனை கூறினார்.
இதற்கிடையில், செயல்படுத்த வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்கு முன்பு அடுத்த திங்கட்கிழமை கிள்ளானில் வெள்ள ஹோட்ஸ்பாட்களை ஆய்வு செய்ய களம் இறங்குவதாக இஸ்ஹாம் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில் பொதுப்பணித்துறை, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் பங்கேற்கின்றன. நாங்கள் ஒருங்கிணைத்து தொடர்ந்து செயல் படுத்துவோம்.
"எடுத்துக்காட்டாக, ஸ்ரீ மூடாவில் நாங்கள் அதை செயல் படுத்தியுள்ளோம், இதற்குப் பிறகு, இது கிள்ளானிலும் பின்னர் ஷா ஆலமிலும் தொடரும்"."நீண்ட கால திட்டம் நிறைவடையும் வரை காத்திருக்கும் வேளையில் உடனடி வெள்ள தடுப்பு நடவடிக்களும் அவசியம் " என்று அவர் கூறினார்.


