புத்ராஜெயா, மே 2 - மருந்து விலைகளைக் காட்சிக்கு வைக்கத் தவறும் தனியார் சுகாதார நிலையங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை முதல் மூன்று மாதங்களுக்கு அமல்படுத்த விதிக்க சுகாதார அமைச்சு விரும்பவில்லை.
மாறாக, நேற்று அமலுக்கு வந்த 2025ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு (மருந்து விலை நிர்ணயம்) ஆணை பற்றி அனைத்து தரப்பினரும் தெளிவாக தெரிந்திருப்பதை உறுதி செய்வதற்காக கல்வி அமலாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் (மருந்து சேவைகள்) டாக்டர் அசுவானா ரம்லி கூறினார்.
இந்த மூன்று மாத காலத்தில் குற்றப் பதிவுகளை வெளியிடும் அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை. இந்த திட்டம் குறித்த புரிதல் மற்றும் இந்த உத்தரவை அமலாக்கம் செய்வோரின் செயல்முறைகளை முறைகளைக் கண்காணித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் இன்று இங்கு மருந்து விலைக் காட்சி முயற்சி குறித்த விளக்க நிகழ்வில் கூறினார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாமும் கலந்து கொண்டார்.
நேற்று முதல், அனைத்து மருத்துவமனை மற்றும் சமூக மருந்தக வளாகங்களும் அந்தந்த வளாகத்தில் விற்கப்படும் மருந்துகளின் விலைகளை பயனீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு (மருந்துகளின் விலைக் குறியிடல்) ஆணை 2025 உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதன்படி அனைத்து கிளினிக்குகள் மற்றும் சமூக மருந்தகங்கள் தெளிவான விலைக் குறிகளுடன் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்க வேண்டும்.
இந்த மூன்று மாத காலப்பகுதியில் கல்வி அடிப்படையிலான கண்காணிப்பு மருந்து சேவைகள் சுகாதார அமைச்சின் அமலாக்க அதிகாரிகளால் வழிநடத்தப்படும் என்றும் அவர்களைத் தொடர்ந்து பயனீட்டாளர் அமைச்சின் அதிகாரிகள் கண்காணிப்பை மேற்கொள்வர் என்றும் டாக்டர் அசுவானா கூறினார்.


