நியூயோர்க், மே 2 - கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டதன் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்கள் குறித்து பொதுச்செயலாளர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
துயரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த மோதல்கல்களை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் கோடி காட்டினார். பதற்றத்தைக் குறைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் பொதுச் செயலாளர் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்று ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டார்.
இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்களுடன் தொலைபேசி அழைப்பில் பேசியபோது அந்தோனியோ குட்டெரெஸ் அத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா


