கோலாலம்பூர், மே 2 - மே மாதம் மத்தியில் அல்லது இறுதி வரை நாட்டைப் பாதிக்கும் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை தொடரும் என்று மெட்மலேசியா கணித்துள்ளது.
இது வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தின் இறுதியில் ஏற்படும். இத்தகைய வானிலை நிலைமைகள் ஒரு சாதாரண நிகழ்வு என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.
இந்த காலக்கட்டத்தில், வானிலை பொதுவாக மதிய வேளையில் வெப்பமாகவும், பிற்பகல் மற்றும் மாலை வேளையில் ஈரப்பதமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது பல பகுதிகளில் நிலவும் கணிக்க முடியாத வறண்ட மற்றும் வெப்பமான வானிலை குறித்து கருத்துரைத்த போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
தொடர்ந்து திசை மாறிக் கொண்டிருக்கும் சீரற்ற காற்று முறைகள் காரணமாக இந்த நிலையற்ற வானிலை ஏற்படுவதாக முகமட் ஹிஷாம் கூறினார்


