கோலாலம்பூர், மே 1- தேசிய போலீஸ் படைத் தலைவர் தலைவர் (ஐ.ஜி.பி.) டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் பெயரில் மின்னஞ்சலைப் பெறும் பொதுமக்கள் அது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அரச மலேசியா போலீஸ்படை அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற ஒரு மின்னஞ்சல் தங்கள் கவனத்திற்கு வந்துள்ள வேளையில் அதன் உள்ளடக்கம் தவறானது என்பதோடு புதிய மோசடி முயற்சி என்றும் கண்டறியப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இடைக்கால இயக்குநர் டத்தோ முகமது ஹஸ்புல்லா அலி கூறினார்.
'போலீஸ் நெகாரா மலேசியா' என்ற தலைப்பில் bennett411williams@
இந்த உள்ளடக்கம் ஐ.ஜி.பி. அனுப்பியது போல் ஜோடிக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படத்துடன் முழுமையாக இருந்தது. மின்னஞ்சலின் உள்ளடக்கம் தவறானது மற்றும் இது ஒரு மோசடி முயற்சி என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஸ்கிரீன்ஷாட் அடிப்படையில் இணைக்கப்பட்ட 'சம்மன்களுக்கு' 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பெறுநர்களுக்கு அந்த மின்னஞ்சலில் உத்தரவிடப்பட்டுள்ளது.


