கோலாலம்பூர், ஏப். 30-போலீஸ்காரர் ஒருவரின் இடது காதை கடித்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக நைஜீரிய தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அத்திகா முகமது @ முகமது சைம் முன்னிலையில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை 38 வயதான ஒகென்யேஹைக்கே கெல்வின் ஒபியான்கே மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காலை 10.10 மணியளவில் கெப்போங்கின் மெட்ரோ பிரிமாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் எதிரே 36 வயதான கார்ப்ரல் டேனியுர் அஸ்ராக் அகமது காதை கடித்து காயப்படுத்தியதன் மூலம் குற்றம் புரிந்ததாக மீது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 325 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி மறுத்து, ஜூன் 10 ஆம் தேதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அரசு தரப்பு சார்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் ஃபர்ஹானா முகமது போட் வழக்கை நடத்தினார்.
இதற்கிடையில், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவிற்குள் நுழைந்ததற்காக ஒபியான்கே மீது மற்றொரு குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் அதிகா முகமது @ முகமது சைம் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது.


