சுபாங் ஜெயா, ஏப். 30- இம்மாதம் முதல் தேதி இங்குள்ள புத்ரா
ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்து தொடர்பான முதல்
கட்ட விசாரணை ஏறக்குறைய முடியும் தறுவாயில் உள்ளதோடு அடுத்த
வாரம் அது முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நான்கு மீட்டர் ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயை
வெளியே எடுக்கும் பணியைப் பொறுத்து இந்த விசாரணைக்கான கால
முடிவு செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
நிச்சயமற்ற வானிலை காரணமாக அந்த குழாயை அகற்றும் பணியில்
தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை, 16 மீட்டர் நீளமுள்ள குழாய்
மீட்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீதான ஆய்வினை வேலையிட
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மேற்கொள்ளும் என்று அவர்
சொன்னார்.
இந்த பணியில் குறிப்பாக வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியும்
பொருள் சோதனையில் மலேசிய தரநிர்ணய மற்றும் சிரிம் எனப்படும்
தொழிலியல் ஆராய்ச்சிக் கழகமும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
குழாயை வெளியில் எடுப்பதற்காக சாலையிலிருந்து 16 மீட்டர் நீளத்திற்கு
குழி தோண்டியுள்ளோம். அந்த குழாயை வெட்டி வெளியே எடுக்கும் பணி
இன்னும் ஒரு வார காலத்தில் முற்றுப் பெறும் என்றார் அவர்.
முன்னதாக அவர், வெடிப்புக்குள்ளான எரிவாயு குழாயை பூமியிலிருந்து
வெளியில் எடுக்கும் பணியை பார்வையிடுவதற்காக பத்திரிகையாளர்களை
ஹூசேன் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
நிச்சயமற்ற வானிலை காரணமாக இச்சம்பவம் மீதான விசாரணையை
மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக அவர் சொன்னார்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டு
நாட்கள் மழையை எதிர்கொள்ள வேண்டியிருந்த து. பள்ளத்தில் நிரம்பிய
நிரை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் காரணமாக இதரப் பணிகள்
தாமதமடைந்தன என்றார் அவர்.


