ஒரு ஏக்கர் பரப்பளவிலான இந்த திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு இன மற்றும் மதப் பின்னணிகளை கொண்ட சமூகங்களுக்கு பெரும் நன்மையை வழங்கும் என இஸ்லாமியர் அல்லாத விவகாரக் குழுவின் (LIMAS) இணைத் தலைவர் இங் ஸீ ஹான் கூறினார்.

“இந்த தகன கூடம் செயல்பாட்டுத் திறன், பயனர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படும் இதில் மூன்று தகன அலகுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
“இந்த கட்டிடம் பயனர் வசதிக்காகப் பல்வேறு வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் மூன்று பேருந்துகள், 25 கார்கள் மற்றும் 30 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடமும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
இன்று கோல லங்காட்டில் உள்ள குவாசைட் மாலில் நவீன தகன கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி முடித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது இங் ஸீ ஹான் இவ்வாறு கூறினார்.
கூடுதல் வசதிகளாக காவலர் இல்லம், நிர்வாக அலுவலகங்கள், சடங்கு அறைகள், பொது கழிப்பறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் (OKU) ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
“இந்த திட்டம் கோல லங்காட் மாவட்டத்தில் முஸ்லிம் அல்லாத சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமச்சீர் மற்றும் நிலையான வளர்ச்சியின் கொள்கைக்கு ஏற்ப உள்ளது.
“இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நேரடியாக பங்களிக்கும் அதே வேளையில், தொழில்முறை, ஒருங்கிணைந்த மற்றும் மக்களுக்கு ஏற்ற சேவைகளை வழங்குவதில் கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் கூறினார்


