புத்ராஜெயா, ஏப்ரல் 29 - பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை அனைத்து தரப்பினரும் கடுமையாகக் கருதுவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த மாலத்தீவு பிரதமரின் நிலைப்பாட்டிற்கு மலேசியாவும் ஆதரவு அளித்துள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை மதிக்கவும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச சமூகத்தை அழைப்பதில் மாலத்தீவின் நிலைப்பாட்டை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது என்று அன்வர் கூறினார்.
மாலத்தீவின் இம்முயற்சிக்கு மலேசியா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், வருங்கால தலைமுறையினருக்கு மிகவும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகப் பருவநிலை மாற்றப் பிரச்சனைகளில் நெருக்கமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
-பெர்னாமா


