ஷா ஆலம், ஏப்ரல் 29 - ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள் கூறி SPM தேர்வு முடிவுகளில் அனைத்து பாடங்களிலும் A 'களை பெற்று வெற்றிக்கண்ட மாணவர்களின் சாதனைக்காக ஒட்டுமொத்த சமூகமும் பெருமிதம் கொள்வதாக வாழ்த்தி. ஏட்டுக்கல்வியில் சிறக்காதவர்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த வெற்றி மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமல்லாமல், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகத்தின் வலுவான ஆதரவையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் அனைவரும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் நம்பிக்கைக்கும் பெருமைக்கும் உடையவர்கள் என பாராட்டினார்.
இந்த மகிழ்ச்சிக்கு மத்தியில், இந்த முறை சிறந்த முடிவுகளை பெறாத மாணவர்கள் மீதும் நாம் கவனத்தையும் முழு உந்துதலையும் செலுத்த வேண்டும். கல்வியில் தோல்வி என்பது எல்லாவற்றிற்கும் முடிவு அல்ல. பல்வேறு மாற்று வழிகள் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு எப்போதும் திறந்துள்ளது என்றார்.
மாநில அரசு, தொடர்புடைய முகமைகளை இணைத்து, பல்வேறு திறன் திட்டங்கள், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றை பின்வரும் நிறுவனங்களின் வழி வழங்குகிறது.
1) இதற்கு விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ STDC வலைத்தளத்தைப் பார்வையிடும்படி கேட்டுக்கொண்டார். https://stdc.edu.my/daftar-sekarang ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை நிரப்பலாம்.
2) மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp)விண்ணப்பிக்கவும், தயவுசெய்து HRD கார்ப் வலைத்தளத்தின் மூலம் e-TRiS அமைப்பை அணுகவும்ஃ https://hrdcorp.gov.my
3) அடுத்து CIAST (பயிற்றுவிப்பாளர் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சிக்கான மையம்) அதற்கு விண்ணப்பிக்க https://permohonan.ciast.gov.my
வழிகாட்டிகளை கிளிக் செய்ய அல்லது நேரடியாக விண்ணப்ப இணைப்புக்குச் செல்லவும் கேட்டுக்கொண்டார்
4) கியாட்மாரா மற்றும் ஐஎல்பி (தொழில்துறை பயிற்சி நிறுவனம்) https://mohon.tvet.gov.my விண்ணப்பிக்க, தயவுசெய்து விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்க அது தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வாகன, வடிவமைப்பு, வெல்டிங், மின்சாரம், குளிர்பதனம் மற்றும் குளிர்சாதனம் (HVAC) மெக்கட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் (IT) பேஸ்ட்ரி, பெண்கள் பேஷன் டிசைன், அழகு, விருந்தோம்பல் மற்றும் சமையல் கலை போன்ற பல்வேறு துறைகளில் படிப்புகள் வழங்கப்படும். இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.
விட்டுவிடாதீர்கள் மாணவ செல்வங்களே, உங்கள் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. உங்கள் எஸ். பி. எம் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து மாணவர்களையும் உயர்ந்த போராட்ட இலட்சியத்துடன் தொடர்ந்து முன்னேறு மாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் ஊக்கப்படுத்தினார்.
கல்வி என்பது பாட புத்தகம் மட்டுமல்ல, திறன்கள், அடையாளம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், இன்னும் வெற்றி பெற்றவர்களுக்கும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் மாநில சட்டமன்ற உறுப்பினருமான பாப்பராய்டு வீரமான் மீண்டும் ஒரு முறை வாழ்த்து கூறினார்.





