செராஸ், ஏப். 28 - ஏழு பிள்ளைகளோடு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் ஸ்டென்லி த/பெ சம்சன் சல்மன் (49) எனும் ஆடவர் குடும்பத்தினரின் சுமையைக் குறைக்க நிதியுதவி வழங்கியுள்ளார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய்.
செயற்கை கால் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டென்லி, குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்ய குப்பைகளைத் திரட்டி விற்பனை செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
இவரின் மனைவி லெட்சுமி இரு தினங்களுக்கு முன்புதான் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார். இத்தம்பதியருக்கு 5 மாதம் தொடங்கி 17 வயது வரையில் ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இக்குடும்பத்தினரால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த இயலவில்லை.
இதனைக் கேள்வியுற்ற பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வேய் அந்த நிதிக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்.
இவர்களின் வீட்டிற்கு வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் எட்வின் வாயிலாக அந்த நிதியை ஒப்படைத்தார். அதேவேளையில், இக்குடும்பத்தினருக்கு உணவு கூடையையும் எட்வின் வழங்கினார்.
இவற்றைப் பெற்றுக் கொண்ட ஸ்டான்லி சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங்கிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


