NATIONAL

கூலிமில் திருட்டு சம்பவம்

28 ஏப்ரல் 2025, 8:30 AM
கூலிமில் திருட்டு சம்பவம்

கூலிம், ஏப்ரல் 28 - கெடா, கூலிம், தாமான் கோத்தா கெனாரியில் தனது கழுத்துச் சங்கிலியைப் பறிக்க முயன்ற ஆடவனைத் தடுத்த பெண்ணின் முழங்கால்கள், கை, மற்றும் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டன.

கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இச்சம்பம் நிகழ்ந்ததாகக் கூலிம் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டண்ட் சுல்கிஃப்ளி அசிசான் கூறினார்.

இச்சம்பவத்தின் போது, 39 வயதான அப்பெண், தனது தாயார் மற்றும் தோழியுடன் சமையலறையில் இருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டர் சைக்கிளில் வந்து இறங்கினர்

அவர்களில் ஒருவன் கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றான். எனினும், அப்பெண் மல்லுக் கட்டியதால், அவனது முயற்சி தோல்வியடைந்தது.

அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை சட்டென அவன் பிடித்து இழுக்க, அறுந்துபோனது. அவரின் கூந்தலையும் அவன் பிடித்து இழுத்ததால் அப்பெண் கீழே விழுந்தார்.

இதனால், இரு முழங்கால்களிலும், இடது கன்னத்திலும், வலது கையிலும் அவர் காயமடைந்தார். பின்னர், கொள்ளையன்கள் இருவரும் தப்பியோடினர்.

இச்சம்வத்தில் விலையுயர்ந்த பொருள் எதுவும் திருடு போகவில்லை. வீட்டின் வெளியே இருந்த CCTV கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட பெண் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.