புத்ராஜெயா, ஏப்ரல் 28 - மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமட் முய்சு மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது.
காலை மணி 9-க்கு வந்த முய்சுவைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்ற பின்னர் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன.
பின், அரச மலேசிய இராணுவப் படையின் முதல் பெட்டாலியனின் மூன்று அதிகாரிகள் உட்பட 102 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹானா இயோ, மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் பொது சேவை இயக்குநர் டான் ஸ்ரீ வான் அஹ்மட் டாஹ்லான் அப்துல் அசிஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், அன்வாருடன் சந்திப்பு நடத்துவதற்கு முன்னதாக வருகையாளர்கள் புத்தகத்தில் முய்சு கையெழுத்திட்டார்.
பெர்னாமா


