கோத்தபாரு, ஏப்ரல் 28 - சுகாதாரப் பணியாளர்களுக்கான குறுகிய அழைப்பு (ஆன்-கால்) அலவன்ஸ் (ETAP) அதிகரிப்பு தொடர்பான விவகாரம் ஜூன் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார தலைமை இயக்குநர், டான் ஸ்ரீ டாக்டர் அபு பகார் சுலைமான் தலைமையிலான செயற்குழு இறுதி முடிவை எடுப்பதற்கு முன், தற்போது இந்த விவகாரம் இறுதிக் கட்ட விவாதத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர், டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
"இரவு பகலாக உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். ஜூன் மாதத்திற்குள் அனைத்து செயல்முறைகளும் முடிக்கப்படும் என்று தாம் நம்புவதாக அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சுகாதார அமைச்சை தாம் வழிநடத்த தொடங்கியதிலிருந்து, அமைச்சின் பணியாளர்களின் நலனே தமக்கு என்றுமே முன்னுரிமையாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா


