கோலா திரங்கானு, ஏப்ரல் 28: நேற்று இரவு பெங்கலான் அராங்கில் உள்ள சூராவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, நான்கு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
இரவு சுமார் 9.35 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஹோண்டா வேஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 77 வயதான அலி முகமது சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே வேளை ஃபோர்டு ரேஞ்சரின் ஓட்டுநர் காயமடையவில்லை.
மோட்டார் சைக்கிளில் சென்ற பாதிக்கப்பட்டவரை கோலா திரங்கானு திசையில் இருந்து கோங் படாக் நோக்கி வந்த ஃபோர்டு ரேஞ்சர் மோதியதாகவும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனை (HSNZ) தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் கூறினார்.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41(1) இன் கீழ், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வழக்கின் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
— பெர்னாமா


