NATIONAL

அரச மலேசியக் கடற்படையின் 91-ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு மாமன்னர் வாழ்த்து தெரிவித்தார்

28 ஏப்ரல் 2025, 7:14 AM
அரச மலேசியக் கடற்படையின் 91-ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு மாமன்னர் வாழ்த்து தெரிவித்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 28 - அரச மலேசிய கடற்படையின் 91-ஆம் நிறைவாண்டை முன்னிட்டு, பணி ஓய்வுப் பெற்றவர்கள் உட்பட அப்படையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அனைவருக்கும் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் நிலைநாட்டுவதில் கடற்படை உறுப்பினர்கள் அனைவரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு தமது அதிகாரப்பூர்வ முகநூலில் மாமன்னர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதேவேளையில், இப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் மாமன்னர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

மேலும், பேராக், லூமூட் கடற்படை தளத்தில் "TLDM Perkasa, Kedaulatan Terpelihara", என்ற கருப்பொருளில் 91-ஆவது நிறைவாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றின் ஒத்திகையின் போது, தி.எஸ்.டி.எம்-மிற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில், அதன் 10 உறுப்பினர்கள் இறந்தனர். அந்த துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, இக்கொண்டாட்டம் மிதமான அளவில் அமைந்தது குறிப்பிடதக்கது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.