சிகாமாட், ஏப். 26- இங்குள்ள ஜாலான் ஹசானில் பள்ளி ஒன்றின் எதிரே வாகனப் போக்குவரத்துக்கு எதிர்திசையிலும் பொறுப்பற்ற முறையிலும் வாகனத்தைச் செலுத்தி சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை விளைவித்தது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பெண் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நீல நிற பெரோடுவா பெஸ்ஸா கார் ஆபத்தான முறையில் செலுத்தப்படுவதைக் காட்டும் 18 வினாடிகள் கொண்ட காணொளி பதிவின் மூலம் இந்த சம்பவம் கண்டறியப்பட்டதாக சிகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அகமது ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.
நாற்பது வயதுடைய அந்தப் பெண் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதை சிறுநீர் பரிசோதனை முடிவுகள் காட்டியதோடு அவருக்கு எதிராக குற்றப் பதிவு எதுவும் இல்லை என்று என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


