பெரு, ஏப்ரல் 25 - பெருவின் கடற்கரையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய கேரல் நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்ததாக நம்பப்படும் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
பெண்ணின் சருமம், நகம், முடி ஆகியவற்றைச் சுற்றி துணியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிர் மானுடவியல் பகுப்பாய்வுகளின்படி அப்பெண் 20 முதல் 35 வயது வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக குப்பைக் கிடங்காக இருந்த அந்த பகுதி 2005-ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
கேரல் நாகரிகம் எகிப்து, இந்தியா, மற்றும் சீனா போன்ற பிற நாகரிகங்களுக்கு சமகாலமானது என அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
--பெர்னாமா


