காஷ்மீர், ஏப்ரல் 25 - இந்தியா சுட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் எனுமிடத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, சுற்றுப் பயணிகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில், சுமார் 26 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 17 காயத்திற்கு ஆளாகினர்.
உயிரிழந்தவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 25 பேரும் ஒரு நேபாளியும் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதோடு, விரைவில் வீடு திரும்ப ஆவலுடன் இருப்பதாக அங்கிருந்து வெளியேறி வரும் சுற்றுப் பயணிகளில் ஒருவர் கூறினார்
இந்நிலையில், தாக்குதலுக்கு காரணமானவர்களைத் தேடும் பணிகளை இந்தியப் படைகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெரனாமா


