புத்ராஜெயா, ஏப். 25 - கே.எல். டவர் என அழைக்கப்படும் கோலாலம்பூர்
கோபுரம் நாளை காலை 9.00 மணிக்கு பொது மக்களுக்குத் திறக்கப்படும்
என்று தகவல் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வருகையாளர்களுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதல்
மடாணி அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை இந்த கே.எல். டவரின்
மறுதிறப்பு நடவடிக்கை அமைவதாக அமைச்சு அறிக்கை ஒன்றில்
கூறியது.
அதே சமயம், அதில் சம்பந்தப்பட்டுள்ள ஊழியர்களின் நலனைக் காப்பதும்
மடாணி அரசாங்கத்தின் கடப்பாடுகளில் அடங்கும் என அது மேலும்
தெரிவித்தது.
கே.எல். டவர் இனி எல்.எஸ்.எச். செர்விஸ் மாஸ்டர் சென்.பெர்ஹாட்
நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என்றும் அமைச்சு
குறிப்பிட்டது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகளை
ஈர்ப்தற்கு ஏதுவாக உகந்த சூழலையும் உரிய பாதுகாப்பு
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதே வேளையில் வாடிக்கையாளர்
நலன் சார்ந்த சேவையை வழங்குவதையும் அரசாங்கம் தனது
கடப்பாடாகக் கொண்டுள்ளது என அமைச்சு அந்த அறிக்கையில்
தெரிவித்தது.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு
காணும் நோக்கில் தற்காலிகமாக மூடப்பட்ட கே.எல். டவர் விரைவில்
திறக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சு கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி
கூறியிருந்தது.


