கூலாய், ஏப் 25 - செனாயில், தாமான் டேசா இடமானில் சேதமடைந்த பெயிண்ட் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆடவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.
நேற்று பிற்பகல் மணி 2.13 அளவில் நடந்த இந்த சம்பவத்தில், அருகிலுள்ள இரண்டு வளாகங்கள், அதாவது ஒரு பட்டறை மற்றும் ஒரு கட்டுமானப் பொருட்கள் கடை ஆகியவை 50 விழுக்காடு சேதம் அடைந்தன. கூடுதலாக, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியிருந்த ஐந்து கார்கள் மற்றும் ஒரு லாரியும் அழிந்தன.
பெயிண்ட் கடையின் ஊழியர்களில், இரு உள்நாட்டினர் மற்றும் ஒரு வெளிநாட்டவர். தீக்காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குறிப்பிட்ட மூன்று வளாகங்களிலும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது.
அதே நேரத்தில் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஐந்து கார்கள் மற்றும் ஒரு லாரியும் முற்றிலுமாக எரிந்தன என பண்டார் கூலாய் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமட் பவ்சி அவாங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், தீ விபத்துக்குள்ளான இடத்தில் இரசாயனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது


