ஷா ஆலம், ஏப் 25 - அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க அதிக பாதிப்புள்ள இடங்களில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைவுபடுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்றக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் பற்றிய விவகாரம் இருந்தது. உள்கட்டமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து திட்டங்களையும் விரைவுபடுத்துவார் என அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசு அறிவிப்புகளையும் அமலாக்கத்தையும் செய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் செயல்முறையை விரைவுபடுத்தி பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் தடுப்புத் திட்டங்களைத் தொடர முடியும் என அவர் சொன்னார்.
இருப்பினும், இந்த வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர் இதன் தொடர்பான மேம்பாடுகளைக் கண்காணிப்பார் என்று அவர் கூறினார்.
அதிக மூன்னுரிமை அளிக்கப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் பட்டியல் இங்கே:
1) சுங்கை கிள்ளான் வெள்ளத் தணிப்புத் திட்டம் (ஆர்.டி.பி.) – 140.7 மில்லியன் வெள்ளி
2) சுங்கை காப்பார் கெச்சில் மற்றும் சுங்கை கபார் பெசார் திட்டம் – வெ.219 மில்லியன்
3) சுங்கை லங்காட் திட்டம் கட்டம் 2 – வெ.684.6 மில்லியன்
4) இரட்டைச் செயலாக்க திட்டம் - வெ.662.5 மில்லியன்
5. சுங்கை டாமன்சாரா திட்டம் - வெ.551.8 மில்லியன்


