ஷா ஆலம், பிப். 25 - பிச்சை எடுக்கும் இடத்திற்கான போராட்டம் ஒரு
ஆடவரின் உயிரைப் பறித்த து. இங்குள்ள செக்சன் 18, வங்கி ஒன்றின்
முன்புறம் நேற்று மதியம் நிகழ்ந்த கைகலப்பில் 40 வயதுடைய அந்த
ஆடவர் நெஞ்சில் கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தார்.
பிச்சை எடுக்கும் இடம் தொடர்பில் அந்த இடத்தில் பிச்சை எடுத்து வந்த
பாதிக்கப்பட்ட நபருக்கும் மற்றொரு பிச்சைக்காரருக்கும் இடையே
தகராறு ஏற்பட்டது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக
ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால்
இப்ராஹிம் கூறினார்.
தகராறு முற்றிய நிலையில் சந்தேக நபர் கத்தியைக் கொண்டு
பாதிக்கப்பட்ட நபரின் நெஞ்சில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த
வெள்ளத்தில் சரிந்து விழுந்த அந்த ஆடவர் சுயநினைவை இழந்தார் என
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொண்ட போலீசார் 28 வயதுடைய சந்தேகப் பேர்வழியை பிற்பகல்
12.30 மணியளவில் கைது செய்தனர். போலீசாரின் சோதனையில்
அவ்வாடவருக்கு ஒன்பது முந்தையக் குற்றப்பதிவுகள் இருப்பது
தெரியவந்த து என அவர் குறிப்பிட்டார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர்,
சந்தேக நபரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற
அனுமதி இன்று பெறப்படும் என்றார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 014-8905051 என்ற எண்களில்
என்ற எண்களில் விசாரணை அதிகாரி முகமது ஹபிஷ் சைரியை
தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


