ஷா ஆலம் ஏப்ரல் 24 ; இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை வழங்கவும் , பொருளாதாரத் துறைகளில் மற்ற சமுதாயங்களுக்கு ஈடாக வளரவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் முழு ஆதரவுடன் தொழிலாளர் மனித வள அமைச்சு முன்னெடுத்துள்ள ஒரு சிறப்பு திட்டமாகும் '''மலேசிய இந்தியத் திறன் முன்முயற்சி (MiSI)'' திட்டம். 
மலேசிய இந்தியத் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்களின் போட்டியாற்றலை வலுப்
இது நாடு முழுவதும் சுமார் 5000 இளைஞர்கள் , தனித்து வாழும் தாய்மார்கள், முன்னாள் குற்றவாளிகள் உட்பட வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் வேட்கையுடன் செயல்படும் இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது குறுகிய காலத்தில் சுமார் 5 நாட்கள் முதல் பல வாரங்கள் வரை பாடத் திட்டங்களுக்கு ஏற்பப் பயிற்ச்சி காலங்களின் வரையறை அமையும் . கடந்த புதன்கிழமை பூச்சோங்கில் நடந்த (Advanced AI in 3D Printing and Laser Engraving.) 3டி பிரிண்டிங் மற்றும் லேசர் பொறித்தல் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் சுமார் 25 பேர் 5 நாள் பயிற்சியில் கலந்து கொண்டு கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வீனிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றனர்.
இந்தத் திட்டத்தின் மற்றொரு அநுகூலம் சொக்சோ மற்றும் மனிதவள அமைச்சுடன் இணைந்து செயல்படுவதும் , இன்றைய தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப ஏற்படும் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையை , இதுபோல் குறுகிய கால பயிற்சி பெற்ற திறன் மிக்கவர்களை கொண்டு நிரப்பலாம்.
உதாரணமாக இப்பொழுது கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகம் தேவைப்படும் , அதாவது சுமார் 250 பேருக்கு மேல் தேவைப்படும் 3டி பிரிண்டிங் மற்றும் லேசர் பொறித்தல் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு துறையில் 25 பேருக்கு இந்தப் பயிற்சிகளை இன்று பூச்சோங்கில்
வழங்கியதன் வழி அவர்களை உடனடி வேலை வாய்ப்புக்கு தயார் செய்வதாகும்.
இது போன்ற பயிற்சிகள் நாடு முழுவதும், அங்காங்கு உள்ள தொழில் துறை தேவைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு வழங்குவது அவர்களுக்கு ஏற்படும் வீண் போக்குவரத்து அசௌகரியம், மற்றும் தங்குமிட சிக்கலை தவிர்ப்பதுடன் குடும்பத்தை விட்டு பிரியும் நிலையையும் தவிர்க்கும் என்றார்.
மேலும் இதில் மனிதவள அமைச்சும் , சமுக பாதுகாப்பு இலாக்காவான சொக்சோவும் நேரடியாக ஈடுபடுவதால் வேலை வாய்ப்புகள் இரட்டிப்பு உறுதி படுத்துகிறது என்கிறார் இன்றைய பயிற்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் மனிதவள அமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான டிக்கம் லுட்ஸ்..


