கோலாலம்பூர், ஏப். 24 - இன்று இஸ்தானா நெகாராவில் உள்ள டேவான் சிங்ஹாசானா கெச்சில் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மலேசியாவிற்கான எட்டு வெளிநாட்டுத் தூதர்களிடமிருந்து நியமனச் சான்றுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.
கியூபாவைச் சேர்ந்த யாதிரா லெடெஸ்மா ஹெர்னாண்டஸ், ஜார்ஜியாவைச் சேர்ந்த இராக்லி அசாஷ்விலி, இங்கிலாந்தைச் சேர்ந்த அஜய் சர்மா மற்றும் புருண்டியைச் சேர்ந்த அலாய்ஸ் பிஜிண்டாவி ஆகியோர் மாமன்னரிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
மைட் மார்டின்சன் (எஸ்டோனியா), மரியோ ஜோஸ் ஆர்மெங்கோல் காம்போஸ் (நிக்கரகுவா), மேரி கிளாரி முகாசின் (ருவாண்டா), மற்றும் ஆலன் ஜோசப் சிந்தெட்சா (மலாவி) ஆகியோரும் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டவர்களில் அடங்குவர்.
இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் மற்றும் வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முகமட் சின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


