ஷா ஆலம், ஏப்ரல் 24: கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் உள்ள பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள காகிதம் மற்றும் ரசாயனக் கிடங்கு ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து காலை 10.10 மணியளவில் தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார். பின்னர் சம்பவ இடத்திற்கு பணியாளர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
"அந்த காகித சேமிப்பு கிடங்கு 40 சதவீதம் எரிந்துவிட்டதாகவும், தீயை அணைக்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும் செயல்பாட்டுத் தலைவர் தெரிவித்தார்,"
இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது ஆரம்பகட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.
"தீயைக் கட்டுப்படுத்த போர்ட் கிள்ளான், தெற்கு கிள்ளான், வடக்கு கிள்ளான், புலாவ் இண்டா, புக்கிட் ஜெலுதோங் மற்றும் டாமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டன," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


