கோலாலம்பூர், ஏப்ரல் 23 - இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவினால், கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் (தி.தி.டி.ஐ) உள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது.
இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு காலை மணி 7.18-க்கு கிடைத்ததைத் தொடர்ந்து, தி.தி.டி.ஐ மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் 3 இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, தீயணைப்பு துறையின் இரண்டாவது நடவடிக்கை மூத்த அதிகாரி அஸ்கான் ஹம்தான் கூறினார்.
நிலச்சரிவின் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளியின் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் பதிவுச் செய்யப்படாத நிலையில், இரண்டு வாகனங்கள் மற்றும் வகுப்பறைகள், ஆசிரியர் அறை, கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட பள்ளி கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன.
-பெர்னாமா


