ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 23 - நேற்று, இந்தியாவில் அமைந்துள்ள காஷ்மீர், பஹல்காமில், சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர். அதில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையம், அங்குள்ள பாதுகாப்பு நிலவரங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரபல சுற்றுலா தளமான பஹல்காம், மலேசிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி செல்லும் பகுதியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெற்கு காஷ்மீருக்கு எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என்று விஸ்மா புத்ரா மலேசிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உதவி தேவைப்படும் மலேசியர்கள் புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெர்னாமா


