NATIONAL

சீன நாட்டினருக்கான விசா இல்லாத திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்

23 ஏப்ரல் 2025, 6:04 AM
சீன நாட்டினருக்கான விசா இல்லாத திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்

புத்ராஜெயா, ஏப்ரல் 23 - சீன நாட்டினருக்கான விசா இல்லாத திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மலேசியா பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“30 நாட்களில் இருந்து, மலேசியாவில் விசா இல்லாத காலத்தை 90 நாட்களாக நீட்டித்தோம். ஆனால் அந்த நேரத்தில், சீனா எங்களுக்கு 15 நாட்கள் மட்டுமே வழங்கியது.

"அதைத் தொடர்ந்து, சீனாவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர அமைச்சகம் பணிக்கப்பட்டது, மேலும் அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையின் போது, கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று விசாக்கள் தொடர்பானது என்றார்.

"புதிதாக, இதை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் தொடருவோம், அதன் பிறகு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விருப்பமும் உள்ளது.

"இதன் பொருள், சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்குள் நுழையும் சீன நாட்டினருக்கு 90 நாட்கள் விசா இல்லாத நாட்கள் வழங்கப்படும். சீனாவும் அதே மாதிரி செயல்படும்," என உள்துறை அமைச்சக தலைமையகத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.