சுங்கை பட்டாணி, ஏப்ரல் 23 - ஜாலோர் கெமிலாங் சின்னம் பாலர் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் அணியப்படுவதை ஒருமைப்பாட்டு அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் மீதான பற்றுதலைக் குழந்தைகளுக்குத் தொடக்க நிலையிலே வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக இந்நடவடிக்கை கருதப்படுவதாக ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் கூறினார்.
கெடா, சுங்கை பட்டாணியில் உலக புத்தகம் மற்றும் பதிப்பு உரிமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
நாடு முழுவதும் 34,654 மாணவர்களை கொண்ட 781 பாலர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக, ஏரன் கூறினார்.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள மாணவர்கள், பள்ளி சீருடைகளில் ஜாலோர் கெமிலாங் சின்னத்தை அணியத் தொடங்கினர் எனபது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா


