கோலாலம்பூர், ஏப்ரல் 23 - தேசிய சேவைப் பயிற்சியின் (PLKN 3.0) அழைப்புக்கான முடிவுகளை இப்போது சரிபார்க்கலாம்.
மே 11 முதல் ஜூன் 24 வரை 45 நாட்களுக்கு நடைபெறும் இந்த முதல் கட்ட பயிற்சிகளில் 550 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சி கோலாலம்பூர் மற்றும் பகாங் பெக்கானில் உள்ள இராணுவ பட்டாள முகாம்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி திட்டம் 70 விழுக்காடு அடிப்படை இராணுவப் பயிற்சியையும் 30 விழுக்காடு தேசியவாத அம்சங்களையும் உட்படுத்தியிருக்கும்.
மலேசிய இளையோர் மத்தியில் நாட்டு பற்று அதிகரிக்கும் முயற்சியில், இந்த தேசிய சேவைப் பயிற்சிக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும். தேசிய சேவைப் பயிற்சியின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான https://jlkn.mod.gov.my/ என்ற முகவரியில் முடிவுகளைச் சரிபார்க்கலாம்.
இதன் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், பொதுமக்கள் JLKN-ஐ 03-40133613 அல்லது 03-40133618 (பயிற்சி பிரிவு) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது info.jlkn@mod.gov.my என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


