புத்ராஜெயா, ஏப். 22- மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி
தொடர்பான விவகாரத்தை விவாதிக்க எதிர்வரும் மே மாதம் 5ஆம் தேதி
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும். இத்தகவலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.
”ஆம்,மே 5ஆம் தேதி“ பிரதமர் துறையின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் போது அவர் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளதாக உள்நாட்டு சீன ஊடகம் ஒன்று முன்னதாக செய்தி
வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து இரு தரப்பையும் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்துவதற்கு இந்த சிறப்பு
நாடாளுமன்றக் கூட்டம் வழி வகுக்கும் என கருதப்படுகிறது.


