MEDIA STATEMENT

பிரசவத்தை பொய்யாகப் பதிவு செய்தது தொடர்பில் இரு பெண்கள் கைது

22 ஏப்ரல் 2025, 9:17 AM
பிரசவத்தை பொய்யாகப் பதிவு செய்தது தொடர்பில் இரு பெண்கள் கைது

ஷா ஆலம், ஏப்ரல் 22-  பிறப்பு பதிவு தொடர்பில் பொய்யான படிவங்களை சமர்ப்பித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு பெண்கள் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் முகமது ரெட்சா அசார் ரெசாலி, 43 மற்றும் 49 வயதுடைய அவ்விருவரையும்  ஏப்ரல் 26 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

மருத்துவமனை உதவியாளர் மற்றும் சுயதொழில் செய்பவர்களான அந்த  இரண்டு பெண்களும் நேற்று மதியம் 1.10 மணி முதல் 1.15 மணிக்குள்  சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிலாங்கூரிலுள்ள  மருத்துவமனைகளில் பிரசவிக்கப்படும்  குழந்தைகளுக்கான பிறப்பை உறுதிப்படுத்துவது மற்றும் ஆவணங்களை ஏற்பாடு செய்து தயாரிக்கும் முகவராக  49 வயதான பெண் செயல்பட்டது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அரசு ஊழியராக வேடமிட்ட மருத்துவமனை உதவியாளர் பிறப்பை பதிவு செய்வதில்  உதவுவதற்காக விண்ணப்பதாரரிடமிருந்து தலா  சுமார் 10,000  வெள்ளி வரை லஞ்சம் பெற்றுள்ளார். அவர்கள் இருவரும் குழந்தை பிறப்பு பதிவு படிவங்களை போலியாக தயாரிப்பதில் கூட்டுச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவ்வட்டாரம் குறிப்பிட்டது.

இதற்கிடையில், இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய  சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. இயக்குநர் ஹைருசாம் முகமது அமின்@ஹமிம், இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தவறான பிறப்பு பதிவு படிவங்களை சமர்ப்பித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று பெண்கள் உட்பட 14 நபர்கள் ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கடந்த வாரம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.