வாஷிங்டன், ஏப்ரல் 22 - திங்கட்கிழமை புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 300 பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் திடீரென்று தீப்பிடித்தது.
அந்த விமான பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏர்பஸ் A330 விமானம் அட்லாண்டாவுக்குப் புறப்படவிருந்த நிலையில், காலை 11:15 மணியளவில் விமான எஞ்சினில் தீப்பிடித்தது.
டெல்டா விமானம் 1213 இல் 282 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கும் ஆரம்ப அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
டெல்டா விமானக் குழுவினர் "விமானத்தின் இரண்டு எஞ்சின்களில் ஒன்றில் தீப்பிழம்புகள் காணப்பட்டபோது, பயணிகளை வெளியேற்றுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றினர்" என்று ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையம் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.


