தாப்பா, ஏப். 22- ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலையொட்டி இரண்டு தொடக்க வாக்களிப்பு மையங்கள் இன்று காலை 8.00 மணிக்கு ஏகக்காலத்தில் திறக்கப்பட்டன.
பீடோரில் உள்ள பொது தற்காப்பு படையின் 3வது படைப்பிரிவின்
மூத்த அதிகாரிகளின் பொழுதுபோக்கு மண்டபம் மற்றும் தாப்பாவிலுள்ள மாவட்ட காவல் தலைமையகத்தின் அங்கிரிக் மண்டபம் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.
மூன்று வாக்களிப்பு வழித்தடங்களில் நடைபெறும் இந்த தொடக்க வாக்களிப்பில் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர் பங்கு கொள்வர்.
பி ஜி.ஏ 3வது படைப்பிரில் உள்ள தொடக்கக்கட்ட வாக்களிப்பு மையம் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையக வாக்களிப்பு மையம் மதியம் 12.00 மணிக்கு மூடப்படும்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் டாக்டர் முகமது யூஸ்ரி பக்கீர், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அப்துல் முஹைமின் மாலேக் மற்றும் சோசலிஸ்ட் கட்சி சார்பில் பவானி கேஎஸ் ஆகியோருக்கு இடையேயான மும்முனைப் போட்டி நிலவுகிறது.


