ஷா ஆலம், ஏப். 21- இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாவது காலாண்டில் சிலாங்கூர் 18 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுப் பயணிகளை சிலாங்கூர் ஈர்ததுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 3.6 விழுக்காடு அதிகமாகும்.
இந்த வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கையில், 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தின் வாயிலாக எண்பது லட்சம் வருகையாளர்களை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என்று தாங்கள் நம்புவதாக ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலா துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
நாங்கள் 70 விழுக்காட்டு உள்நாட்டு சுற்றுப்பயணிகளையும் 30 விழுக்காட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் ஈர்க்க இலக்கு வைத்துள்ளோம். இந்த வருகையின் மூலம் 1,100 கோடி வெள்ளிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.
சுற்றுப்பயணிகளின் வருகை உள்ளூர் பொருளாதாரத்திற்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு கணிசமாகப் பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டங்களில் மட்டும்
40 லட்சத்தைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


