அலோர் ஸ்டார், ஏப்ரல் 21 - 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் உட்பட உணர்வைத் தூண்டும் முறையிலான பிரச்சாரங்கள் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மேற்கொள்ளப்படுவது குறித்து துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சைஹிட் ஹமிடி வருத்தம் தெரிவித்தார்.
கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பிரச்சாரங்கள் இருக்க வேண்டுமே தவிர பிறரைக் குறைத்து மதிப்பிட அல்ல என்று தேசிய முன்னணி தலைவருமான அவர் கூறினார்.
"பிரச்சார வேகம் அதிகரித்து வருவதை நான் காண்கிறேன். ஆனால், பொருத்தமற்ற பிரச்சனைகள், தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் அற்பமான பிரச்சனைகளை உள்ளடக்கிய தந்திரோபாயங்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன்," என்று நடந்து வரும் இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் கூறினார்.


