ஷா ஆலம், ஏப். 21- பத்து தீகா சட்டமன்றத் தொகுதி நிலையிலான
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து
சிறப்பித்தனர்.
இங்குள்ள செக்சன் 17, டேவான் எம்.பி.எஸ்.ஏ. கெக்வா மண்டபத்தில்
பிற்பகல் 2.00 தொடங்கி நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில்
விருந்தினர்கள் ருசித்து மகிழ்வதற்கு ஏதுவாக பல்வேறு உணவு
பதார்த்தங்களும் பானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக விருந்தில் கலந்து கொண்ட
சிறார்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட்
ரொக்க அன்பளிப்பினை வழங்கினார்.
இந்த பொது உபசரிப்பு கடந்த வாரம் பாடாங் ஜாவாவில் நடைபெற
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளம்
காரணமாக அந்த விருந்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 6 மற்றும் 8வது பிரிவுகளின் ஆதரவுடன்
நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்வில் பெட்டாலிங் மாவட்ட ஓராங் பெசார்
டத்தோ எம்ரான் காடீர், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி
யூசுப், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் உள்ளிட்ட
தலைவர்கள் கலந்து கொண்டனர்.


