ஷா ஆலம், ஏப். 21 - கிள்ளான், கம்போங் ராஜா உடாவில் உள்ள சாலை சமிக்ஞை விளக்கு சந்திப்பில் மோட்டார் சைக்கிள்கள் காரின் மீது மோதிய சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
நேற்று அதிகாலை நிகழ்ந்த இவ்விபத்தில் உள்நாட்டவரான 22 இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான வேளையில் 22 மற்றும் 16 வயதுடைய இருவர் பலத்தக் காயங்களுக்குள்ளானதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா கூறினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் சிகிச்சைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரின் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார் என அவர் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 4.10 மணியளவில் போர்ட் கிள்ளானிலிருந்து ஜாலான் கிம் சுவான் நோக்கி வந்து கொண்டிருந்த காரோட்டி கம்போங் ராஜா உடா சந்திப்பில் சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் இருந்த போது வலதுபுறம் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
கார் சந்திப்பில் திரும்பும்போது கிள்ளானிலிருந்
இந்த விபத்து குறித்த தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி முகமது கைருல்னிசாம் அப்துல் தாலிப்பை 010-245 2144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.


