உலு சிலாங்கூர், ஏப். 21- அண்மையில் இங்கு நடைபெற்ற 2025ஆம் ஆண்டு
உலு சிலாங்கூர் மாவட்ட பள்ளிகள் விளையாட்டு மன்ற கோல்ப்
போட்டியில் களும்பாங் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் கெர்லிங்
தோட்ட தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்த மைகீத்தா குருகுலம் மற்றும்
ஆசிரம மாணவர்கள் பல வெற்றிகளைப் பெற்று சாதனைப் படைத்தனர்.
புக்கிட் பெருந்தோங் கோல்ப் கிளப்பில் நடைபெற்ற இப்பேட்டியில்
மாவட்டம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்ட பல திறமைமிக்க
விளையாட்டாளர்களுக்கு மத்தியில் தீரத்துடன் களத்தில் நின்று கடும்
போட்டி கொடுத்த இந்த விளையாட்டாளர்கள் பல பிரிவுகளில் முதல் பரிசு
முதல் ஆறுதல் பரிசு வரை பெற்றனர்.
பதினெட்டு வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவில் கிஷன் ராஜ்
வெற்றியாளராக வாகை சூடிய வேளையில் கிஷோர் குமார் ஆறுதல்
பரிசு பெற்றார்.
பதினைந்து வயதுக்கும் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பிரிவில் திவ்யனுக்கு
மூன்றாம் இடமும் சிவநேசன் மற்றும் கவினேஸ் ஆகியோருக்கு ஆறுதல்
பரிசும் கிடைத்தன.
பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் மதன்
இரண்டாம் இடத்தையும் ஷர்வின் மூன்றாம் இடைத்தையும் அர்வின்
ஆறுதல் பரிசையும் பெற்றனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட கிஷன் ராஜ், திவ்யன், சிவநேசன்,
மதன்ராஜ் ஆகியோர் சிலாங்கூர் மாநில நிலையிலான போட்டிக்கு தேர்வு
பெற்றது பெருமைக்குரிய சாதனையாக விளங்குகிறது.
சுங்கை சோ தமிழ்ப்பள்ளியின் தலைமையாசியரும் போட்டி ஏற்பாட்டுக்
குழுத் தலைவருமான திருமதி சாந்தி, இப்போட்டியில் கலந்து கொண்ட
மைகீத்தா ஆசிரம மற்றும் குருகுல சிறப்பான ஆட்டத் திறனை
வெளிப்படுத்தி சாதனைப் படைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சி
தெரிவித்தார்.
இப்போட்டியின் பயிற்றுநர்களாகவும் நிர்வாகிகளாகவும் செயல்பட்ட
எஸ்.குமார், அஜிஸ் (கோல்ப் பயிற்றுநர்), களும்பாங்
இடைநிலைப்பள்ளியின் புறப்பாட துணைத் தலைமையாசியர் ஜாஸ்னி,
களும்பாங் தேசிய இடைநிலைப்பள்ளியின் கோல்ப் குழுவின் நிர்வாகி
திருமதி அஞ்சலை ஆகியோருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக்
கொண்டனர்


