MEDIA STATEMENT

ஐந்து இடங்களில் இன்று மாநில அரசின் மலிவு விற்பனை

20 ஏப்ரல் 2025, 2:06 AM
ஐந்து இடங்களில் இன்று  மாநில அரசின் மலிவு விற்பனை
ஐந்து இடங்களில் இன்று  மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப் 20-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)  ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

அத்தியாவசிய சமையல் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த ரஹ்மா விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை  சுங்கை காண்டீஸ், டெங்கில், கின்ராரா, ஸ்ரீ கெம்பாங்கான், ஸ்ரீ செர்டாங் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின் பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), பீகூன் (வெ.2.50), சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் பத்து ஏஹ்சான் மார்ட் பல்பொருள் கடைகளைத் திறக்க பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது.  தற்போது சுங்கை துவா மற்றும் பண்டான் இண்டா ஆகிய இடங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ள வேளையில்  உலு கிளாங்கில் இதன் கிளை விரைவில் திறக்கப்படவுள்ளது.

பி.கே.பி.எஸ். ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த  கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் சந்தைதைய விட 10 முதல் 15 விழுக்காடு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்தை தரம் உயர்த்தும் முயற்சியாக இந்த ஏஹ்சான் மார்ட் கடைகளை மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.