ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 18 — கல்வி முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக, 2027ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட்போர்டுகளை பொருத்துவதை கல்வி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆசிரியர்களின் செயல்பாட்டு மையங்களை கல்வி தொழில்நுட்பத்திற்கான சிறந்த மையங்களாக மேம்படுத்துவது உட்பட துணைத் திட்டங்களையும் தயாரித்து வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
"2027 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட்போர்டுகளை பொருத்துவதற்கான எங்கள் இலக்கை அடைவோம் என நாங்கள் நம்புகிறோம், அப்போது ஒரு புதிய பாடத்திட்டமும் வெளியிடப்படும்," என்று அவர் பினாங்கு பள்ளிகளுக்கான ஸ்மார்ட்போர்டு ஒப்படைப்பு விழாவின் போது கூறினார்.
இந்நிகழ்வில் மாநில கல்வித் துறை இயக்குனர் வான் சஜிரி வான் ஹாசனும் கலந்து கொண்டார்.
ஒற்றுமை அரசாங்க எம்.பி.க்கள், மாநில அரசு மற்றும் பொது வங்கி போன்ற மூலோபாய கூட்டாளர்களின் ஒத்துழைப்பு மூலம், 396 பள்ளிகளிலும் முழு ஸ்மார்ட்போர்டு பயன்பாட்டை அடைந்த முதல் மாநிலம் பினாங்கு என்று ஃபட்லினா கூறினார்.
ஸ்மார்ட்போர்டுகள் மாணவர்களிடையே டிஜிட்டல் திறன்களை அதிகரிக்கும் அதே வேளையில், அதிக பயனுள்ள கற்றலை ஊக்குவிக்கின்றன என அவர் கூறினார்.
“பினாங்கின் சிறந்த அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு இந்நடவடிக்கை ஊக்கமளிக்கும்” என அவர் கூறினார்.
— பெர்னாமா


