நேப்பல்ஸ், ஏப் 18 - இத்தாலியின் தென் பகுதியிலுள்ள கரையோர நகரான Naplesக்கு அருகே கேபல் கார் விழுந்ததில் நால்வர் மரணம் அடைந்தனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற கேபல் காரின் இணைப்பு அல்லது கேபல் அறுந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்த நிலையில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டன, காயத்திற்கு உள்ளான 5ஆவது நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என தீயணைப்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மீட்பு நடடிவக்கையில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து உடனயாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


