NATIONAL

இவ்வாண்டு இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன

18 ஏப்ரல் 2025, 8:54 AM
இவ்வாண்டு இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன

கோலாலம்பூர், ஏப் 18 - இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இணைய மோசடி சம்பவங்கள் 12,110 ஆக அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10,715 இணைய மோசடி சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

மின் வர்த்தக மோசடி சம்பவங்கள் 19.8 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் இதற்கு முன்பு நிகழ்ந்த 2,116 மோசடி சம்பவங்களை ஒப்பிடுகையில் இவைh 2,535ஆகப் பதிவாகியுள்ளதாகவும் புக்கிட் அமான் வர்த்தக குற்றப்பிரிவின் இடைக்கால இயக்குநர் டத்தோ ரொஹாய்மி முகமட் இசா கூறினார்.

5,214 தொலைத்தொடர்பு குற்றங்கள், கடன் மோசடி தொடர்பில் 1,404 சம்பவங்கள், 711 மின் நிதி மோசடிகள், இல்லாத முதலீடுகள் தொடர்பான 2,026 சம்பவங்கள் மற்றும் 220 காதல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய மோசடி சம்பவங்கள் உயர்ந்ததற்கு இணைய தளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் போக்கே காரணமாகும், குறிப்பாக நோன்பு பெருநாளுக்கு முன்னதாக அதிகமான பயனர்கள் டிஜிட்டல் முறையில் பொருட்களை கொள்முதல் செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியும், AI செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் இந்த இணைய மோசாடி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.