மும்பை, ஏப்ரல் 18 - தற்போது தங்க விலை உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதற்கு அமெரிக்க வரிக் கொள்கை நிலைத்தன்மையற்று இருப்பதே காரணமாகும்.
இதனால், இந்திய பயனீட்டாளர்கள் புதிய தங்க நகைகளை வாங்குவதற்காக தங்களின் பழைய தங்க நகைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மும்பையில், உள்நாட்டு தங்கத்தின் விலை அடிப்படையில் 10 கிராம் தங்கம் ஒரு லட்சம் இந்திய ரூபாய் அல்லது 5,157 ரிங்கிட் 64 சென்னுக்கு விற்கப்படுகிறது.
அதாவது, முன்பு வாங்கியதை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக விலை கொடுத்து தங்க நகைகளை வாங்குவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 100,000 இந்திய ரூபாயை எட்டியுள்ளது. இது திருமண காலம் என்பதனால் வாடிக்கையாளர்கள் புதிய நகைகளை வாங்குவதற்காக அதை மறுவிற்பனை செய்கிறார்கள் என்று நகைக்கடை உரிமையாளர குமார் ஜெயின் கூறினார்.
வழக்கமான வாடிக்கையாளர்களின் வருகையும் பெருமளவில் குறைந்துள்ளது. சீனாவிற்கு அடுத்து இந்தியா அதிக தங்க நகைகளை வாங்கும் பயனீட்டாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா


