ஷா ஆலம், ஏப். 18 - இம்மாதம் 1ஆம் தேதி ஏற்பட்ட எரிவாயு குழாய்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் வாடகை
வீடுகளை வழங்க சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம்
(பி..கே.என்.எஸ்.) முன்வந்துள்ளது.
சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை கழகத்தின் (எல்.பி.எச்.எஸ்.)
வாயிலாக இந்த திடத்தை அமல்படுத்துவது தொடர்பில் தாங்கள் மாநில
அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக பி.கே.என்.எஸ். குழுமத்தின் தலைமை
செயல்முறை அதிகாரி டத்தோ மாமுட் அப்பாஸ் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் நிதிச் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதை நாங்கள்
அறிவோம். ஆகவே, அந்த வீடுகளை சந்தையை விட குறைவான
அல்லது செலவினத்தை விட குறைவான விலையில் வழங்க நாங்கள்
முன்வந்துள்ளோம். இதில் நாங்கள் லாபம் எதனையும் ஈட்டவில்லை
என்று அவர் சொன்னார்.
நேற்றிரவு இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர்களைச்
சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீடுகளுக்கான விண்ணப்பம் மற்றும் வாடகை தொடர்பான
விவகாரங்களை மாநில அரசும் எல்.பி.எச்.எஸ். நிர்வாகமும் கையாளும்
என்றும் அவர் சொன்னார்.
அப்பாட்ர்மெண்ட, கொண்டோமினியம், தரை வீடுகள், இரட்டை வீடுகள்
மற்றும் பங்களாக்களை உள்ளடக்கிய அந்த குடியிருப்புகள்
கோலாலம்பூரிலும் ஷா ஆலம் செக்சன் 6,7, மற்றும் 13இல்
அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
பி.கே.என்.எஸ். பத்து லட்சம் வெள்ளி நிதியுதவி வழங்கியது.


