கோலாலம்பூர், ஏப்ரல் 17 - இன்று நிறைவடைந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணம், மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது.
இப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று மடாணி அரசாங்கத்தின் பேச்சாளரும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சருமான ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.
'இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் வெற்றி அடைந்ததுள்ளது.
மேலும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் பிரதமருக்கும் இடையிலாக உறவை வலுப்படுத்துவதிலும் வெற்றிப் பெற்றதாக அவர் தெரிவித்தார். இந்த பயணத்தினால், அரசாங்கத்தின் இலக்குகளும் வெற்றி பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஜி ஜின்பிங்கும் இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை உட்படுத்திய 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களைப் பறிமாறிக் கொண்டனர்.
பெர்னாமா


