NATIONAL

தனது நாயைக் கட்டுப்படுத்தத் தவறிய உரிமையாளருக்கு 8,500 ரிங்கிட் அபராதம்

17 ஏப்ரல் 2025, 7:42 AM
தனது நாயைக் கட்டுப்படுத்தத் தவறிய உரிமையாளருக்கு 8,500 ரிங்கிட் அபராதம்

பாலிங், ஏப்ரல் 17 - கடந்த நோன்புப் பெருநாள் இரண்டாவது நாள் அன்று 5 பேரைக் கடிக்கும் அளவுக்கு தனது `Rottweiler` நாயைக் கட்டுப்படுத்தாமல் கவனக்குறைவாக இருந்ததற்காக, அதன் உரிமையாளருக்கு (சோங் சென் சோங்), 8,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

60 வயதான அந்த உரிமையாளர் தம் மீதான 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, பாலிங் மஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 1,700 ரிங்கிட் அபராதம் என்ற வகையில் மொத்தமாக 8,500 ரிங்கிட் விதிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், குறிபிட்ட அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 2 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனும் நீதிபதி அறிவித்தார்.

இச்சம்பவத்தன்று இன்னொரு `Rottweiler` நாயுடன் சேர்ந்துகொண்டு இந்த நாய் ஐவரைக் கடித்து காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.