கோலாலம்பூர், ஏப்ரல் 16 - அன்றாட பணிகளை எளிதாக்க தரவின் துல்லியத்தை உறுதி செய்வதற்காகப் பொதுமக்கள் தங்கள் MyKad தகவலை அவ்வப்போது புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேசிய பதிவு விதிமுறைகள் 1990 இன் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, ஒவ்வொரு தனிநபரும் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி போன்ற தகவல்களில் ஏற்படும் மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என்று தேசிய பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய விவரங்கள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டால் புதிய தகவல்களை அறிவிக்க JPN அலுவலகத்திற்கு வர வேண்டும்.
"எடுத்துக்காட்டாக, 90 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு வேறு இடத்தில் தங்கியிருப்பவர்கள் அடையாள அட்டையில் முகவரி மாற்றத்தைச் செய்ய வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டது.
தகவல்களை அல்லது அடையாள அட்டைகளைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இணையதளங்கள் மூலம் விளம்பரங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"இருப்பினும், இதற்கான பொறுப்பு இன்னும் தனிநபரிடமே உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டது.


