NATIONAL

மறைந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்குப் பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்

16 ஏப்ரல் 2025, 2:27 AM
மறைந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்குப் பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - நேற்று தேசிய பள்ளிவாசலில் மறைந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இறுதி மரியாதை செலுத்தினார்.

மதியம் மணி ஒன்று அளவில், அப்பள்ளிவாசலின் பிரதான தொழுகை மண்டபத்திற்கு அவர் வருகையளித்தார்.

விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நைம் மொக்தார் ஆகியோர் பிரதமருடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.

அன்னாரின் குடும்ப உறுப்பினர்களையும் பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே, இயற்கை எய்திய நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் குடும்பத்தினருக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேராரசியார் ராஜா சாரித் சோஃப்பியா தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டனர்.

நாட்டின் மேம்பாட்டிற்கு அன்னார் ஆற்றிய மகத்தான பங்கிற்கு தாம் நன்றி பாராட்டுவதாகவும் சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.